Tuesday, 14 May 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 3

இதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

 ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 2

  னதில் ஒரு சிறு கணக்கு ஓடியது. SATCO சொன்னது போல நாம் ஆறு பேர் மற்றும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு சிலர் வரலாம் என கணக்கிட்டால் ஒரு உலங்கு வானூர்தியில் (Helicopter) செல்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை. மேலும் இவ்வாறான விமானங்கள் செல்வதற்கான தூரத்துக்கப்பால் கூட 'ஆபிரகாம் லிங்கன்' இருக்கலாம். அப்படியாயின் நிலையான இறக்கைகளை உடைய விமானத்தின் மூலம் தான் செல்ல வேண்டும். திடீர் என கார்ல் சொன்னது நினைவுக்கு வந்தது.


*   *   *

 கார்ல் - நோர்வேயில் 'வானிலை' குறித்து மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரன். அமெரிக்க குடியுரிமையும் பெற்றவன். உலகில் எங்கெல்லாம் வானிலை அவதானிப்பு நிலையம் இருக்கிறதோ அங்கெல்லாம் தன் மென்பொருள் இருக்க வேண்டும் என விரும்புபவன். அவனது 'weather graphics ' மென்பொருள் இப்போது ஐரோப்பாவின் பல முன்னானி தொலைக்காட்சி நிலையங்களில், செய்தியின் முடிவில் வானிலை பற்றி கூறும் போது பின்னணியில் பயன் படுத்துகிறார்கள். இப்போ இதற்கும் நமது கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா...சொல்கிறேன்.கார்லின் பொழுதுபோக்கு பறத்தல். இதற்கு ஏதுவாக தனியார் விமானஒட்டி உரிமை பத்திரம் எடுத்து வைத்திருக்கிறான். இந்த உரிமை பத்திரத்தில் அனுமதிக்கப்படும் அத்தனை விமானங்களையும் ஒட்டி பார்த்துவிட வேண்டும் என்பது அவன் கனவு. அவனுடைய மென்பொருளை, குறிப்பாக இராணுவ, விமானபடை தளங்கள், பயணிகள் விமான நிலையங்கள் உபயோகிப்பாதால் அவனுக்குண்டான தொடர்புகளை பயன் படுத்தி அவனது கனவை முடிந்தளவு நனவாக்கிக் கொண்டே இருக்கிறான். 'F - 15' ரக யுத்த விமானங்களின் இரண்டு இருக்கை இருக்கும் பயிற்சி விமானத்தில் கூட பறக்கும் பாக்கியம் பெற்றவன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.சில வருடங்களுக்கு முன் அவனுடன் ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னான், அவனது வாழ்நாளில் ஒரு முறையேனும் ஒரு விமானத்தில் சென்று இயக்கத்தில் இருக்கும் கப்பலின் தளத்தில் இறங்க வேண்டும். அது கிட்டாத பட்சத்தில்  அப்படி கப்பலின் மேல் தரையிறங்கும் விமானத்தில் ஒரு பயணியாகவேனும்  போகவேண்டும். 'அதில் என்ன அப்படி ஒரு சிறப்பு?' என்று அப்பாவியாக நான் கேட்ட போது ஒரு கணம் 'உன் அறிவு இவ்வளவுதானா?' என்பது போல் உற்று நோக்கியவன் சொன்னான். அதை சொல்வதை விட அனுபவித்தல் தான் தெரியும் என்றவன் அவனால் முடிந்தவரை சுருக்கமாக விபரித்தான். நான் வியப்பில் ஆழ்ந்தேன்.

*   *   *

 ப்போது ரோலர் கோஸ்டர் போன்ற கேளிக்கை சாதனங்களில் செல்லும் போது எப்படி பயமும், மகிழ்வும் மாறி மாறி வருமோ அது போன்ற நிலையில் இருந்தேன். இது வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம். ஆனால் கார்ல் கூறியதில் இருந்து அது கரணம் தப்பினால் மரணம் போன்ற சாத்தியகூறும் உண்டு. சரி என்ன ஆனாலும் போவது என்று முடிவு எடுத்து விட்டேன். ஆனால், வீட்டில் 'எப்படி போகிறோம்' போன்ற விபரங்கள் சொல்லாமல், வேலையில் இருந்து ஆறு பேர் கப்பலுக்கு போகிறோம்; வருவதற்கு ஒரு நாள் ஆகும் என்று மட்டும் கூறுவதாக முடிவு எடுத்து கொண்டேன்.

கார்ல் அப்படி என்ன தான் சொல்லியிருந்தான் என்கிறீர்களா? அவன் சொன்னதன் சுருக்கம் இரண்டு வாக்கியங்கள் தான்.1. Catapults assisted Take off
    


2. Arrestor wire Landing 

   
 


இதன் விளக்கம் அடுத்த பாகத்தில்... ...தொடருவேன். 

8 comments:

 1. சுவாரஸ்யம்... தொடர்கிறேன் ஆவலுடன்...

  ReplyDelete
  Replies
  1. ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி

   Delete
 2. அடுத்த பாகம் எப்பொழுது வரும் என்று ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆதரவுக்கு நன்றி. முடிந்தவரையில் விரைவாக எழுதுகிறேன்.

   Delete
 3. மிக அருமை நன்றி ....

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நேரத்தை பொருட்படுத்தாது கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

   Delete
 4. அப்போது ரோலர் கோஸ்டர் போன்ற கேளிக்கை சாதனங்களில் செல்லும் போது எப்படி பயமும், மகிழ்வும் மாறி மாறி வருமோ அது போன்ற நிலையில் இருந்தேன்

  very nice information...

  ReplyDelete

உங்கள் கருத்து...